ஸ்னேகம் தரையோடு பறக்கும் வண்ணாத்திப் பூச்சிகள் மண்ணுடன் ஸ்னேகம் கொள்கிறது மண் தீக்குழம்புடன் ஸ்னேகம் கொள்கிறது தீக்குழம்பு உயிரணுக்களுடன் ஸ்னேகம் கொள்கிறது உயிரணுக்கள் மண்ணுடன் காதல் கொள்கின்றன மண்ணுடன் கலந்த உயிரணுக்களுடன் மண்ணுடன் ஸ்னேகம் கொண்ட வண்ணாத்திப் பூச்சிகள் உறவு கொள்கின்றன வாழ்க்கை இனிமையாய் வண்ணாத்திப் பூச்சிகளுடன் தாவிப் பறக்கின்றன எந்தக் குறிப்பிட்ட திசையையும் பின்பற்றாது வண்ணாத்திப் பூச்சிகள் வாழ்க்கையை நடத்துகின்றன எனினும் எந்தத் தரையோடு பறக்கும் வண்ணாத்திப் பூச்சியின் திசையும் பின்பற்றாது வண்ணாத்திப் பூச்சிகள் வாழ்க்கையை நடத்துகின்றன எனினும் எந்தத் தரையோடு பறக்கும் வண்ணாத்திப் பூச்சியின் திசையும் அதற்கு மட்டும் தெரிந்திருக்கிறது நான் ஒரு வரியை இயல்பாய்க் கொண்டு செல்கின்றேன் அது நிச்சயமானதொரு திசையைத் தேர்வு செய்கிறது தரையோடு பறக்கும் வண்ணாத்திப் பூச்சிகள் மண்ணுடன் ஸ்னேகம் கொள்கின்றன நான் உங்களுடன் பேசுகிறேன் |