அவரவர் பாட்டுக்கு எல்லோரும் அவரவர் பாட்டுக்கு ஒன்றுக்கிருந்துகொண்டிருந்தார்கள் நான் நுழைந்ததும் அவையிலே அமைதி நான் கேட்டேன் ஏன் நிறுத்திவிட்டீர்கள் அவரவர் போதனைக்கேற்ப திரும்பிப் பார்த்தேன் எல்லாம் உன்னால்தான் உற்றுப் பார்த்தேன் கேட்டது ஒரு குரல் ஒன்றும் விளங்கவில்லை குப்புற விழுந்து பார்த்தேன் எல்லாம் நின்ற நிலையிலேயே அரங்கேறிக்கொண்டிருந்தது தாவிக் குதித்தேன் பாதாள சாக்கடை வறண்டிருந்தது எங்கும் நில நடுக்கம் மெல்ல எட்டிப் பார்த்தேன் இரண்டு கையளவு ஒற்றைச் சூரியகாந்திப்பூ |