ஒரு கொடி ஒரு படகு, , , கொடியொன்றைக் கொடுத்தார் ஒருவர் சின்னக் காகிதத்தால் ஆனது பாதி நீலம் பாதி பச்சை நட்ட நடுவிலே ஒரு நட்சத்திரம் அழகாய் இருந்தது ஒன்றை ஸ்டாம்பு ஆல்பத்திலும் இன்னொன்றைச் சட்டையிலும் குத்திக்கொண்டேன் சந்தோஷமாய்க் கடற்கரையோரம் நடந்தேன் மறுபுறக் கட்டிடம் ஒன்றிலிருந்து ஒருவர் வந்தார் என்ன கொடி இது ஏது இது வினாத்தொடுத்தார் ஒருவர் கொடுத்தார் அழகாய் இருந்தது அணிந்துகொண்டேன் என்றேன் யார் எனக் கேட்டுத் தொடர்பு கொண்டு கொடியைப் பிடுங்கிக்கொண்டார் சிலர் அருகில் வந்து படகு ஒன்று தயாரித்துள்ளோம் நீங்கள் வர வேண்டும் என்றனர் கடலில் படகில் குழந்தைகள்தான் செல்ல வேண்டும் அதுதான் பொருத்தம் என்று கூறி குழந்தைகளுக்கு மிட்டாய் தந்து கையசைத்தேன் வீட்டிற்கு வந்தபொழுது உடன் செல்ல வேண்டிய நண்பர் முன்னேமேயே புறப்பட்டுவிட்டிருந்தார் எங்கும் பழகிய முகங்கள் |