முத்தம் முத்தம் கொடுங்கள் பரபரத்து நீங்கள் முன்னேறிக்கொண்டிருக்கையில் உங்கள் நண்பி வந்தால் எந்தக் தயக்கமும் இன்றி இறுகக் கட்டித் தழுவி இதமாக தொடர்ந்து நீண்டதாக முத்தம் கொடுங்கள் உங்களைப் பார்த்து மற்றவர்களும் அவரவர் நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும் விடுதலையின் சின்னம் முத்தம் முத்தம் கொடுத்ததும் மறந்துவிட்டு சங்கமமாகிவிடுவீர்கள் பஸ் நிலையத்தில் ரயிலடியில் நூலகத்தில் நெரிசற்பூங்காக்களில் விற்பனை அங்காடிகளில் வீடு சிறுத்து நகர் பெருத்த சந்தடி மிகுந்த தெருக்களில் முத்தம் ஒன்றுதான் ஒரே வழி கைவிடாதீர்கள் முத்தத்தை உங்கள் அன்பைத் தெரிவிக்க ஸாகஸத்தைத் தெரிவிக்க இருக்கும் சில நொடிகளில் உங்கள் இருப்பை நிரூபிக்க |