பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்53

குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்

ஹலோ என்ன சௌக்கியமா
இப்பொழுது புதிதாக என்ன விளையாட்டு கண்டு
பிடித்துள்ளாய்
உன்னுடைய Scamp எப்படி இருக்கிறது
பூச்செடிகளுக்கிடையே
புல்தரைகளின் மேல்
நெடிய பசும் மரங்களின் கீழ்
சுற்றிலும் வண்ணாத்திப்பூச்சி
மரச்சுவர்களுக்கிடையே
சிவப்பு வீட்டின் உள்ளேயிருந்து
Scamp எட்டிப் பார்க்கிறான்
வெளியே பழுப்பு நாய் இருந்தான்
என்ன விஷயமென்று Scamp வெளியே வந்தான்
தெரியாதா நம்முடைய கூட்டம் மரத்தடியில்
சீக்கிரம் வந்துவிடு என்றான்
பல வர்ண நாய்களுக்கிடையே தாவி நுழைந்தான்
கேட்டது ஒரு கேள்வி
எங்கள் தலைவனைக் கௌரவிக்க
நாமெல்லோரும் கூடியிருக்கிறோம்
அவர் கண்டுபிடித்ததென்ன
அடக்கத்துடன் Scamp சொன்னான்
பின்னால் சுமக்கும் பை
கூட்டம் கலைந்தது
அடுத்த கதையை நீ சொல்
அன்புடன் என்றும் உன்