உன் நினைவுகள் எனினும் நான் உற்றுப் பார்த்தேன் கூர் வைரக்கற்கள் சிதறும் ஒளிக் கற்றைகளை வீசும் விளக்கை அப்பொழுதேனும் துடிக்கும் மனத்தின் பிணைப்பினின்று மீள முடியாது இவ்விதம் தொடர்ந்திருக்க முடியாது என்று நிற்கும் தரையின் பரிமாணங்களைச் செதுக்கிய ஓவியத்திற்குச் செல்வேன் பழகிவிட்ட ஓவியமும் கைவிடும் உதிர முடியாத காகிதப் பூக்கள் வண்ணம் இழக்கும் மெல்லிய ஒலியுடன் நாடி நரம்புகளைத் தொற்றிக்கொண்டு சிறிது நேரம் மூச்சளிக்கும் இசை எழுத்துக் கூட்டங்களுக்கும் தொடர்வேன் ஏதேனும் ஒரு மூலையில் உன் நினைவுகள் என் அறையில் நான் முடங்கிக் கிடக்கையில் எப்பொழுதேனும் அந்த உயிரிழந்த பஸ்ஸரை |