எங்கோ எங்கோ பார்த்த முகம் எங்கோ பார்த்த கண்கள் எங்கோ கேட்ட ஒலி எல்லாம் எங்கோ எங்கெங்கோ வேறு யாருமில்லை நான்தான் எனக்கும் உங்களுக்கும் இடையில் பல்லாயிரம் வருடம் வேறுபாடு முன்பென்றால் நினைவு பின்பென்றால் கனவு இப்பொழுதென்றால் நான் உங்கள் நினைவுகளையும் கனவுகளையும் களைந்து இப்பொழுது உங்களெதிரில் நிற்கும் என்னைப் பாருங்கள் அப்பொழுது காலம் மறைந்து நானும் என்னெதிர் நீங்களும் மட்டுமே இருப்போம் உதிரும் மலரின் கணிதத்தை என்றாவது நீங்கள் யோசித்திருந்தால் மட்டும் |