பக்கம் எண் :

60ஆத்மாநாம் படைப்புகள்

நான்கு கவிதைகள்

            I

அணுவுக்கு எதிராய்
மக்கள் கிளர்ச்சி
அணு உலையிலிருந்து
சிதறிவிட்டது
அணுத்துகள் ஒன்று
கலவர மக்கள்
கூக்குரலிடுகின்றனர்
வானிலிருந்தும் நீரிலிருந்தும்
வினோத வாகனங்களைக்கொண்டு
ஆராய்கின்றனர்
சுற்றுப்புறத்திலிருந்து
வெளியேற வேண்டும்
உள் உலகிலிருந்து வெளி உலகிற்குத்
தப்பிக்க வேண்டும்
மீண்டும் மனிதம் அடிமையாயிற்று
அதன் கண்டுபிடிப்பிற்கு

                  II

எனக்குள் என்னில் என்னாய் விரிந்து
உள் அமிழ்ந்தேன்
கற்பனை நிஜம்
காலம் ஒளி
ஒலி பயணம்
உருவம் உள்ளடக்கம்
எல்லா இடங்களிலும் தேடினேன்

தெரிந்தும் தெரியாமல்
விரிந்தும் விரியாமல்
இருந்தும் இல்லாமல்

ஆன் ஏன்