III அற்புதமாய்ப் புலர்ந்த காலை நீள நிழல்கள் நிலத்தில் கோலமிட வண்ணக்கலவையாய் உலகம் எங்கும் விரிந்து கெட்டியாய்த் தரை என் காலடியில் நிஜம் புதைந்து கிடக்க IV ஒரு தலைப்பிடாத கவிதையாய் வாழ்க்கை ஒரு நாள் இரண்டு நாள் எனத் தொடர்ந்த நாட்களை எண்ணினேன் காலையைத் தொடர்ந்து மாலை இரவாகும் காலப் புணர்ச்சியில் பிரமித்து நின்றேன் கடற்கரையில் |