பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்77

மண்புழுக்கள்

ஊமத்தம் பூக்களாய் நாறிக் கிடந்தோம்
வேலிச் சருகுகளாய் வாடிக் கிடந்தோம்
எருக்கம் பூக்களாய் வடிந்து கிடந்தோம்
செவ்வரளிப் பூக்களாய்ச் சினந்து கிடந்தோம்

எங்கள் வண்ணங்களை வரைந்தீர்கள்

நிலம் பதியா எம்மைக் காணுங்கள்
வெளிப்புறமும்
உட்புறமும்
எங்களுக்குத் தெரியாது

தெரிவியுங்கள்
நாங்கள்
உலகின் மண்புழுக்கள் என