பக்கம் எண் :

78ஆத்மாநாம் படைப்புகள்

செய் அல்லது செத்து மடி

என்னைத் தனிமைப்படுத்த இயலும்
தேவையின்றி எனக்காய்
புதிய எஜமானர்களைத் தோற்றுவிக்க இயலும்
எனக்கு மட்டும்
மூன்று வேளை
உணவு உத்தரவாதப்படுத்த முடியும்
உலகமே காசை உண்கையில்
நான் மட்டும் எவ்விதம் வேறாக முடியும்
வேலையைச் செய்
வைப்புநிதி சேர்
இசை நாட்டியம் நாடகம் இலக்கியம்
எல்லாம் உன் பொழுதுபோக்கு
உண்மை
ஆயினும்
என் பேனா
என் காகிதம்
என் கவிதை