ஸ்திதி் கைகள் முகங்களாய் மரங்கள் அரக்கர்களாய்த் தம்மைக் காட்டும் வேசிகளாய் ராத்திரி நாய்களுக்கு நம்மைக் கண்டால் கொண்டாட்டம் நிழல்கள் நம்முடன் பேசும் நேரத்தில் நாமிருக்க மாட்டோம் குடிசைகளில் சுதந்திரக் கொடிகள் கோவணமாய்ப் பறக்கின்றன சைக்கிள் கம்பிகள் மட்டும் ஒன்றையொன்று நேசிக்கின்றன |