பக்கம் எண் :

98ஆத்மாநாம் படைப்புகள்

நான்தான் நான்

முருங்கை மரக் கிளையினின்று
இலைகள் உதிர்கின்றன
வாழ்க்கை நகர்கிறது

வானின் நீலத்தைத் தீட்டியவனும்
மேகக் கூட்டங்களைச் செதுக்கியவனும்
கண் நிறைய மரங்களை அளிப்பவனும்
கடலுக்கு வெண் நுரை வழங்கியவனும்
மண்ணும் மலையும் புழுவும் பூச்சியும்
நான்தான் நான்தான் நான்தான்