பக்கம் எண் :

108எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு என்று நம்பினர்; தெய்வங்களுக்குப் பலியிட்டு வணங்கினர்; ஊழ்வினையிலே நம்பிக்கை வைத்திருந்தனர்.

இவைபோன்ற இன்னும் பல பழக்க வழக்கங்களை இந்நூலிலே காணலாம்.

அகநானூற்றுப் பாடல்கள் வெறும் அகப்பொருள் ஒழுக்கத்தை மட்டும் சொல்லவில்லை. அகப்பொருளோடு புறப் பொருட் செய்திகளையும் இணைத்துக் கூறுகின்றன. ஆகையால் தமிழ் நாட்டின் பண்டை நாகரிகத்தைக் காண்பதற்கும், தமிழக வரலாற்றை அறிவதற்கும் இந்நூல் சிறந்ததொரு கருவியாகும்.