பக்கம் எண் :

112எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

நற்றிணையிலே பத்துப்பாடல்கள்; புறநானூற்றிலே ஒரு பாட்டு; இவர் பாடியவை.

இவருடைய அகநானூற்றுப் பாடல்கள், குறுந்தொகைப் பாடல்கள், நற்றிணைப் பாடல்கள் பெரும்பாலும் பாலைத்திணையைப் பற்றிய பாடல்களேயாகும். பாலை நிலத்தின் இயற்கை; பாலையொழுக்கம்; இவைகளைப் பற்றிப் பாடுவதிலே இவர் சிறந்தவர் என்பதை இவருடைய பாடல்களே காட்டுகின்றன. இவருடைய பெயருக்கு முன்னுள்ள ‘‘பாலைபாடிய’’ என்ற பட்டமும் இவருடைய ஆற்றலை அறிவிப்பதாகும்.

குறிஞ்சிக்கலி. இது கலித்தொகையின் இரண்டாவது பகுதி. இதில் இருபத்தொன்பது பாடல்கள் உண்டு. இதன் ஆசிரியர் கபிலர்.

இவர் தமிழ் நாட்டு அந்தணர் மரபைச் சேர்ந்தவர். கடையெழு வள்ளல்களில் ஒருவன்-பறம்பு மலைத் தலைவன்-பாரியின் உயிர்த்தோழர். பாரி உயிர் வாழும் வரையிலும் அவனுடனேயே உறைந்திருந்தார். பாரி இறந்த பின் அவனுடைய பெண்களை நல்வாழ்விலே வாழ வைப்பதற்காகப் பெரும்பாடுபட்டார்.

சங்க நூல்களிலே இவருடைய பாடல்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அகநானூற்றிலே பதினெட்டுப் பாடல்கள் இவர் பாடியவை; குறுந்தொகையிலே இருபத்தொன்பது பாடல்கள் இவர் இயற்றியவை; நற்றிணையிலே இருபது பாடல்கள் இவர் செய்தவை. இப்பாடல்கள் பெரும்பாலும் குறிஞ்சித்திணையைப் பற்றிய பாடல்களேயாகும்.

ஐங்குறுநூற்றிலே உள்ள குறிஞ்சித்திணையைப் பற்றிய நூறு பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. பத்துப்பாட்டில் உள்ள