பக்கம் எண் :

116எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

தலைவியுடன் பேசுவது, இவை போன்ற பகுதிகள் எல்லாம் மிகவும் சுவையுடன் எழுதப்பட்டிருகின்றன.

கைக்கிளைத்திணை, பெருந்திணைப் பாடல்களிலே நகைச்சுவையைக் காணலாம்.

பாலைவனக் காட்சி; அங்கே வாழ்வோரின் வாழ்க்கை நிலை, மலைக்காட்சி; அங்கு வாழும் மக்களின் செயல்கள், மருத நிலத்தின் இயற்கை வளம்; அங்குள்ள மக்களின் நாகரிகம்; அவர்களுடைய உயர்தரமான இல்லற வாழ்வு. முல்லை நிலத்து மக்களின் பொழுதுபோக்கு; அவர்களுடைய வாழ்க்கை; அந்த நிலத்தின் இயற்கைக் காட்சி. நெய்தல் நிலத்தின் தோற்றம்; அந் நில மக்களின் வாழ்க்கை இவைகளை யெல்லாம் படிப்போர் உள்ளத்திலே பதியும்படி கூறுவதிலே கலித்தொகைப் பாடல்களுக்கு இணையாக வேறு எப்பாடல்களையும் எடுத்துக் காட்ட முடியாது.

அரசியல் முறைகள்; நல்ல சிறந்த அறவுரைகள்; செல்வச் சிறப்பு; பாரத, ராமாயண வரலாறுகள்; பல புராண வரலாறுகள் இவைகள் எல்லாம் உவமானங்களாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள், அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள், பலவற்றைக் கலித்தொகைப் பாடல்கள் கூறுகின்றன.

படிப்போர் சலிப்படையாமல் ஊக்கத்துடன் படிக்கும் வகையிலே அழகாகவும், இனிமையாகவும் உவமான உவமேயங்களுடன் செய்திகளை எடுத்துக்கூறும் சிறந்த பாடல்கள் கலித்தொகைப் பாடல்களாகும்.

இதன் சிறப்பைக் கருதியே ‘‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’’ என்று இந்நூலைப் பாராட்டிக் கூறியிருக்கின்றனர். இப்