118 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
நானும் என் தாயும் வீட்டுக்குள்ளிருந்தோம். அப்பொழுது அவன் வந்து ‘‘தண்ணீர்த்தாகம்! குடிக்க நீர் வேண்டும்! தண்ணீர் கொடுங்கள்’’ என்று கேட்டான். ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்தவளே! பொன் தகட்டாலே செய்த செம்பிலே குடி நீரைக்கொண்டு போ! அவன் தாகந்தணியத் தண்ணீரை அருந்தச் செய்து வா!’’ என்றாள் என் அன்னை. நானும் என்னை மறந்தேன். தங்கச் செம்பிலே தண்ணீரை எடுத்துக்கொண்டு போனேன். அவன் தாகத்தைத் தணிக்கும் ஆவலுடன் சென்றேன். அவன் என்னைக் கண்டவுடன் வளையலையணிந்த என் முன் கையைப் பற்றிக்கொண்டான். கையை நெரித்தான். நான் அரண்டு போனேன். ‘‘அம்மா! இவன் செய்வதைப் பார்!’’ என்று கத்திவிட்டேன். அன்னையும் ‘‘என்ன! என்ன!’’ என்று அலறிக் கொண்டு ஓடிவந்தாள். உடனே என்னை நான் சமாளித்துக்கொண்டேன். ‘‘ஒன்றுமில்லை. உண்ணும் நீரால் விக்கினான்’’ என்று ஒருபோடு போட்டேன். அவன் செய்த குறும்புத்தனத்தை மறைத்துவிட்டேன். உடனே என் அன்னையும் அவன்மீது பரிவுகொண்டாள்; அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். அவனோ, என்னைக் கொல்லுகின்றவனைப் போலே தன் கடைக்கண்ணாலே பார்த்தான்; தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான். இவ்வாறு செய்தான் அந்தத் திருட்டுப் பையன். ’’ சுடர்த்தொடீஇ கேளாய்! தெருவில் நாம் ஆடும் மணல் சிற்றில் காலிற்சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி; மேல்ஓர் நாள் |