120 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
அல்லவா? ஒருநாள் இரவு அவனிடம் நான் அகப்பட்டுக்கொண்டு பட்டபாட்டைக் கேள்! எல்லாருந் தூங்குகின்ற நள்ளிரவிலே, துணியால் போர்த்திக் கொண்டு, தலைவன் குறிப்பிட்ட இடத்திலே போய் நின்று கொண்டிருந்தேன். அந்த மொட்டைத் தலைக் கருங்குட்டப் பார்ப்பான் என்னைப் பார்த்துவிட்டான். ஏதோ உளறினான்; பணிந்தான்; நேரமில்லா நேரத்திலே இங்கு நின்ற நீர் யார்? என்றான். வைக்கோலைக் கண்ட எருமை மாட்டைப்போல் என் பக்கத்திலேயே நின்றுவிட்டான். அதோடு அவன் சும்மா இருந்தானா? ‘‘பெண்ணே, வெற்றிலைபாக்கு போட்டுக்கொள்’’ என்றான். தன் பாக்குப் பையை அவிழ்த்தான். வெற்றிலை பாக்கு எடுத்துக் கொடுத்தான். நான் இவ்வளவுக்கும் ஒன்றும் வாய் பேசவில்லை; வாளா நின்றேன். உடனே அவன் சிறிது எட்டி விலகினான். ‘‘நீ சிறுமி, என் கையில் அகப்பட்டாய்! நான் இவ்வூர் ஆண் பிசாசுகளிலே ஒருவன். என்னை நீ துன்புறுத்தினால் இவ்வூரார் உனக்குப் பலி கொடுக்காமல் பண்ணிவிடுவேன்’’ என்று ஏதேதோ உளறிக்கொட்டினான். அவன் என்னை ஏதோ ஓர் தேவதையென்று நினைத்துக் கொண்டான்; பயந்து போனான். இவ்வுண்மையை நான் உணர்ந்து கொண்டேன். உடனே தாமதமில்லாமல் ஒரு கை மணலை அள்ளினேன்; அவன்மேல் வீசினேன். அவன் அரண்டு கூச்சல் போடத் தொடங்கிவிட்டான். இம்மாதிரி அவனால் இரவுக் குறியிலே, நகைப்புக் கிடமான ஒரு காரியம் நடந்துவிடடது’’. |