124 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
கலித்தொகைப் பாடல்கள் பலவற்றிலே செங்கோல் ஆட்சி சிறப்பித்துக் கூறப்படுகின்றது. கொடுங்கோலாட்சியின் கொடுமை விளக்கப் படுகின்றது. ‘‘அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகிக் கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல் உலகுபோல், உலறிய உயர் மர வெஞ்சுரம்; (பா. 10) குடி மக்கள் துன்புற்று அலறும்படி-அறமற்ற வழியிலே அவர்களிடம் பொருளை விரும்பி-கொலைக்கஞ்சாமல் ஆளும் அதிகாரிகளைக் கொண்டு-கொடுங்கோலாட்சி புரியும் மன்னவனுடைய நாடு பாழாகும். அதுபோல உலர்ந்து போன - உயர்ந்த - மரங்களையுடைய பாலைவனம் காணப்படுகின்றது’’. குடி மக்களிடம், அளவுக்குமீறி வரிவாங்கி அறங்கொல்லும், அதிகார வர்க்கத்தாலும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கத் தலைவராலும் நாடு பாழாகும் என்பதை இதனால் அறியலாம். ‘‘முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடிபோலக் கலங்குபு (பா. 34) நீதிமுறைகளிலே சோர்வடைந்த மன்னவன் ஆட்சியிலே வாழ்கின்ற குடிகளைப்போலக் கலக்கமடைந்து”: நீதியற்ற ஆட்சியிலே வாழுங் குடிகளுக்கு அமைதியில்லை அல்லற்படுவார்கள்; இதனை இவ்வரி விளக்குகின்றது. ‘‘தன்னுயிர் போலத் தழீஇ உலகத்து மன்னுயிர் காக்கும் மன்னன் (பா. 143) தன்னுயிரைப் போலவே உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் எண்ணிப் பாதுகாக்கின்ற மன்னவன்’’. இதனால் ஒரு அரசனுடைய முதற்கடமை இன்னதென்று கூறப்பட்டது. தனது நாட்டில் வாழும் உயிர்களையெல்லாம் |