பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்129

செறிவெனப்படுவது கூறியது மறாஅமை;
நிறையெனப்படுவது மறைபிறர் அறியாமை;
முறையெனப்படுவது கண்ணோடாது உயிர்வௌவல்;
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்.                      (பா. 133)

1. இல்லோர்க்கு உதவி செய்வதே உண்மையான உதவி.

2. நண்பர்களை விட்டுப் பிரியாமலிருத்தலே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய குணம்.

3. உலகப் போக்கை உணர்ந்து அதற்கேற்றபடி நடந்துகொள்ள வேண்டியதே சிறந்த மனிதத்தன்மை.

4. தன்னைச் சேர்ந்தவர்களை வெறுக்காமல் காப்பாற்றுவதே அன்பு.

5. அறிவற்றோர் சொல்லைப் பொறுத்துக்கொள்ளுவதே அறிவுடைமை.

6. தான் கூறிய சொல்லை மாற்றாமல் அதன்படி நடந்துகொள்ளுவதே உறவு.

7. இரகசியத்தைப் பிறர் அறியாமல் காப்பாற்றும் குணந்தான் சிறந்த குணம்.

8. குற்றம் புரிந்தவர்களைத் தயவு தாட்சண்யமின்றித் தண்டிப்பதுதான் நீதிமுறை.

9. பகைவரை வெல்லும் வாய்ப்பு வரும்வரையிலும், பொறுத்துக் கொண்டிருப்பதுதான் உண்மையான பொறுமை.

இந்த ஒன்பது அறவுரைகளும் அரிய மாணிக்கங்கள். ஒவ்வொருவரும் வாழ்க்கையிலே பின்பற்ற வேண்டியவை.

‘‘பிறர்நோயும் தம்நோய்போல் போற்றி அறன்அறிதல்
சான்றவர்க் கெல்லாம் கடன்.                                      (பா. 139)