பக்கம் எண் :

130எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

பிறர்க்கு உண்டான துன்பத்தையும் தமக்கு நேர்ந்த துன்பமாக எண்ணிப் பாதுகாப்பது; அறநெறியை அறிந்து நடத்தல்; இவை அறிஞர்களின் கடமை.

அறிஞர்களின் கடமை இன்னதென்பதைக் குறிப்பிடுகின்றது இது. இவை போன்ற இன்னும் பல சிறந்த அறவுரைகளைக் காணலாம்.

கூடா நட்பு

தந்நலம் ஒன்றையே குறிக்கொண்டு நண்பினராக நடிப்பவர்கள் உண்மையான நண்பர்கள் அல்லர். அவர்கள் தங்களுக்கு நன்மை கிடைக்கும் வரையிலுந்தான் நண்பர்களாக நடிப்பர். தந்நலம் நிறைவேறாதபோது நட்பைக் கைவிடுவர். இத்தகையவர்களுடன் நட்புகொள்ளுதல் கூடாது.

நண்பருக்கு உதவி செய்தல் தன் கடமை என்று நினைக்கின்றவர்களுடன் ஏற்படும் தொடர்புதான் இடையிலே அறுந்து போகாது; என்றும் பிணைந்து நிற்கும். நண்பர் இருவரும் இத்தகைய எண்ணமுடையவர்களாயிருந்தால் அவர்களுடைய நட்புக்கு எப்பொழுதும் முடிவேயில்லை.

‘‘சிறப்புசெய்து உழையராப் புகழ்பு ஏற்றி மற்றவர்
புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல்.

நண்பர் தமது பக்கத்திலே இருக்கும்போது அவரைக் கொண்டாடுவார்கள்; புகழ்ந்து போற்றுவார்கள். அவர்கள் அப்பாற் போனபின் அவர்களைப் பழித்துப் பேசுவார்கள்: இவர்கள் அற்பர்கள். ’’

‘‘செல்வத்துள் சேர்ந்தவர் வளன்உண்டு, மற்றவர்
ஓல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்புபோல்.
பொருந்திய கேண்மையின் மறையுணர்ந்து, அம்மறை
பிரிந்தக்கால் பிறர்க்குரைக்கும் பீடிலார் தொடர்புபோல்.

ஒருவர் செல்வமுள்ளவராயிருக்கும் காலத்தில் அவருடன் ஒன்றாக உறைந்திருப்பார்கள்; அவர்களுடைய செல்வத்தைச்