பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்131

சுரண்டித் தின்பார்கள். அவர் வளமிழந்து வறுமையுற்ற காலத்தில் ஒரு சிறிதும் உதவி செய்யமாட்டார்கள். இவர்கள் அறிவிலிகள். ’’

ஒன்றுபட்ட நண்பராயிருக்கும்போது நண்பருடைய இரகசியங்களை யெல்லாம் தெரிந்துகொள்ளுவார்கள். நட்பு முறிந்து, அவர்களை விட்டுப்பிரிந்தபின், தாம் அறிந்த இரகசியங்களைப் பிறரிடம் வெளியிடுவார்கள். இவர்கள் பெருநதன்மையற்றவர்கள்; அற்பர்கள்; இவர்களுடைய நட்பு ஆபத்தானது’’.

புறங்கூறுவோன், தன்னலமே குறிக்கோளாக உடையவன், இரகசியத்தை வெளியிடுவோன், இவர்கள் நண்பர்களாகக் கொள்ளுவதற்குத் தகுதியற்றவர்கள். அவர்களுடன் கொள்ளும் நட்பு கூடாநட்பாகும், இக் கருத்தை மேலே காட்டிய பாடற் பகுதிகளிலே காணலாம். இது கலித்தொகையின் இருபத்தைந்தாவது பாட்டு.

மனச்சாட்சி

குற்றமுளார் நெஞ்சு குறுகுறுக்கும், என்பது அனைவரும் அறிந்த பழமொழி, வேண்டுமென்றே குற்றமிழைப்பவர்களின் உள்ளத்திலே ஒரு சிறிதும் அமைதியிராது. நேர்மையின்றித் தாம் செய்த குற்றத்தை நினைத்து நினைத்து நெஞ்சம் நைவார்கள். சந்தர்ப்ப வசத்தால் மனமறிந்து செய்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடிக்கொண்டாலொழிய அவர்கள் மனத்திலே அமைதி ஏற்படாது. இது அறிஞர்கள் கண்டறிந்த உண்மையாகும்.

‘‘கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்,
தங்காது, தகைவின்றித், தாம் செய்யும் வினைகளுள்
நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை.                                   (பா. 125)

அரிவற்றவர்கள், தாம் செய்யும் தீங்குகளைக் கண்டவர்கள் உலகத்திலே ஒருவரும் இல்லையென்று கருதி