138 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
புராணங்கள், தெய்வங்கள் பல புராண வரலாறுகளும், தெய்வங்களும் கலித்தொகைப் பாடல்களிலே காணப்படுகின்றன. பரமசிவன் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவுணர்களின் திரிபுரத்தை எரித்தார். (பா. 238-150) எருமையின் மேல் ஏறி வந்த எமனைப் பரமசிவன் தன் சூலப்படையால் பிளந்து கொன்றார். இது மார்க்கண்டேயர் வரலாற்றை நினைவூட்டுகினறது. (பா. 103) திருமால் வாமன உருவமாக வந்து மாபலியிடம் மூன்றடி மண் தானமாகப் பெற்றார். உடனே திருவிக்கிரம அவதாரம் எடுத்து உலகம் மூன்றையும் ஓரடியால் அளந்தார். (பா. 124) கண்ணனைக் கொல்லுவதற்கு ஒரு அசுரன் குதிரை வடிவமாக வந்தான்; அவன் கம்சனால் ஏவப்பட்டவன். அக்குதிரையின் வாயைப் பிளந்து அவ்வசுரனைக் கொன்றான் கண்ணன். (பா. 103) கண்ணன் தன்னை எதிர்த்துப் போர் புரிந்த மல்லரை மாளச் செய்தான். பகைவர்கள் யானையின் மேல் ஏறி வந்து கண்ணனை எதிர்த்தனர்; அந்த யானையின் நெற்றியிலே சக்கராயுதத்தை அழுந்தும்படி வீசி அப்பகைவர்களைப் பயந்தோடும்படி செய்தான். (பா. 134) இவைகள் கலித்தொகையிலே காணப்படும் புராண வரலாறுகள். மன்மதன்; அவனுக்கு மீன்கொடியுண்டு. பரமசிவன்; அவருடைய கொடி, காளைக்கொடி; பார்வதியுடன் வீற்றிருப்பார். அவர் கொன்றை மலர் |