பக்கம் எண் :

142எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

‘‘அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரங் கண்ஏய்க்கும்,
கணங்கொள் பல் பொறிக், கடுஞ்சினப்புகரும்.

பகைவர்களை வருத்துந் தன்மையையுடைய வச்சிராயுதத்தைக் கொண்ட இந்திரன், உடம்பிலே ஆயிரங் கண்கள் அமைந்திருப்பதைப் போல், கூட்டமான பல புள்ளிகளையுடைய சினமுள்ள புள்ளிக் காளையும்’’.

‘‘வேல்வலானுடைத் தாழ்ந்த விளங்கு வெண்துகிலேய்ப்ப,
வாலிது கிளர்ந்த, வெண்காற் சேயும்.

வேற் படையோனான செவ்வேளினிடம் தாழ்ந்து கிடக்கின்ற வெண்மையான உடையைப் போல, தூய்மையாகக் காணப்படும் வெண்மையான கால்களையுடைய சிவப்புக் காளையும்’’.

காளைகளின் இலக்கணம் இவை. மூன்று பாடல்களில் காளைகளின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. மேலே எடுத்துக் காட்டிய பாடற் பகுதிகள் 105-வது பாட்டிலே காணப்படுவன. காளைகளுக்குக் காட்டப்பட்டிருக்கும் உவமைகள் குறிப்பிடத் தக்கவை. இவ்வைந்து பகுதிகளையும் வைத்துக் கொண்டு ஐந்து வண்ணப் படங்கள் வரையலாம்.

பழக்க வழக்கங்கள்

கலித்தொகையிலே பண்டைத் தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்த பல பழக்க வழக்கங்களைக் காணலாம்.

பல்லி சொல்லுக்கு பலன் உண்டு. பெண்களுக்கு இடது கண் துடித்தால் அதனால் நன்மை உண்டு. (பா. 11)

தவத்திலே தமிழ் மக்களுக்கு நம்பிக்கையுண்டு. முன் பிறப்பிலே தவஞ்செய்தவர்கள் இப்பிறவியில் எல்லா