பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்143

இன்பங்களையும் நுகர்ந்திருப்பார்கள். மறு பிறப்பிலே நம்பிக்கையுண்டு. (பா. 30)

பொய் சாட்சி சொன்னவன் ஒரு மரத்தின் கீழ் இருப்பானாயின் அந்த மரம் பற்றியெரிந்துவிடும். (பா. 34)

மலையிலே வாழ்வோர் அறமல்லன செய்தால், வள்ளிக் கிழங்கு நிலத்திலே ஆழமாக ஊன்றிப் பருக்காது; தேன் பூச்சிகளும் அடை காட்டாது; தினைக்கதிர்கள் நன்றாகக் கதிர் விட்டுப் பயன் தராது; மழை பெய்யாது. (பா. 39)

பகலிலே-நனவிற் செய்த காரியங்களைப் பற்றி இரவிலே கனவு காண்பர். (பா. 49)

கனவிலே கண்ட செய்திகள், நனவிலே பலிப்பதும் உண்டு. (பா. 128)

இவ்வுலகிலே ஒழுக்கத்துடன் வாழ்ந்து, குடிகளையும் குறையின்றிக் காப்பாற்றிய மன்னவன், இறுதியிலே சுவர்க்கத்தையடைந்து இன்பந்துய்ப்பான்.

அரசர்க்கு மூன்று வகையான முரசங்கள் உண்டு. அவை வீர முரசு, தியாக முரசு, நீதி முரசு என்பன. (பா. 132)

நோய் வந்தால் அதனை நீக்கி உயிர் போகாமல் காப்பாற்றுந் திறமை மருத்துவர்களுக்கு உண்டு. (பா137)

சந்திரனை இராகு என்னும் பாம்பு பிடித்துக் கொள்ளுவதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. (பா. 140)

தை மாதத்திலே நீராடி நோன்பிருக்கும் வழக்கம் பெண்களிடம் உண்டு. (பா59)