144 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
அந்தணர்கள் அக்கினி சாட்சியாக மணம் புரிந்து வந்தனர். (பா. 69) போர்க்காலத்தில், போர் நடைபெறும் இடத்தில் வாழும் குடிகள் அவ்விடத்தை விட்டு வேறிடங்களுக்குக் குடியேறி விடுவார்கள்; போர் முடிந்த பின் மீண்டும் தங்கள் பழைய இடத்திற்குக் குடியேறுவார்கள். (பா. 78) இவை போன்ற இன்னும் பல பழக்க வழக்கங்களை இந்நூலிலே காணலாம். கற்றறிந்தார் போற்றும் கலித்தொகையிலே தீந்தமிழ்த் தேனை நுகரலாம். சிந்தனைக்கு விருந்தளிக்கும் சிறந்த செய்திகளைக் காணலாம். |