பக்கம் எண் :

158எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

ஆற்றங்கரைப் பேச்சு

பெண்கள் பலர் கூடினால் அவர்கள் சும்மாவிருக்க மாட்டார்கள். ஏதேனும் வம்பு பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் தங்களுடைய குற்றங்களைப் பற்றிச் சிந்தனை செய்யமாட்டார்கள். பிறர் குற்றங்களை எடுத்துக்காட்டிப் பழிப்பதிலே பின் வாங்கமாட்டார்கள். பெண்களிடம்-வேறு வேலையில்லாமல் சோம்பேறித்தனமாகப் பொழுது போக்கும் பெண்களிடம்-இச்செயலை இன்றும் காணலாம். இதனை ஒரு பரிபாடல் எடுத்துக்காட்டுகின்றது.

‘‘தோழியே! அவளுக்கு வெட்கமில்லையோ! தன் கணவன் நலமற்ற பரத்தையின் இன்பத்தை நுகர்ந்தான்; தன்னைக் கைவிட்டான்; என்று ஊடியிருந்தாள் ஒரு குலமகள். அவள் இப்பொழுது, இந்தப் புது வெள்ளத்திலே, பெரிய யானையின் முதுகின் மேல் உள்ள அம்பாரியில் தன் கணவனோடு ஏறியிருக்கின்றாள். அவள் நாணமற்றவளோ? என்று பேசுகின்றனர் சில பெண்கள்.

கூட்டத்துக்குள்ளே நின்றுகொண்டிருக்கும் ஒருவன் பெண்களின் மார்பை உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவனைக் கண்ட பெண்கள், உறுதியற்ற ஓட்டை மனமுடையவன்; ஆண்மையற்றவன்; என்று இழித்துரைத்தனர்.

ஒருத்தி தன் ஆடை அணிகள் நெகிழ்ந்ததையும் அறியவில்லை; பிறர் சொல்லுவதையும் கவனிக்கவில்லை; தன் நிறம் மாறுபட்டாள்; வழியோடு சென்ற காதலனிடம் தன் நெஞ்சைப் பறிகொடுத்தாள். இதைக் கண்ட பெண்கள் சிலர் ‘‘இப்படி அன்பை வெளிப்படுத்தினால் கற்பு அழிந்துவிடாதா?