பக்கம் எண் :

162எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

உன்னுடைய பாதங்களை வணங்கினோம்; பலதடவை அடுத்தடுத்து வணங்கினோம்; வாழ்த்தினோம். முன்னே நாங்கள் செய்த தவத்தின் பயனால் இன்னும், மேலும் மேலும் இவ்வாறு வணங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

நின்னடி தொழுதனெம்
பன்மாண் அடுக்க இறைஞ்சினெம், வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம் செய் தவப்பயத்தால்;
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே’’                    (பா. 13. வரி 61-64)

இது திருமாலைப் பற்றிய பாடல். திருமாலின் எதிரிலிருந்து சேவித்துக் கொண்டிருக்கும் நிலையே ஆன்மா அடைய வேண்டிய பயன், என்னும் வைணவமதத் தத்துவம் இவ்வடிகளிலே அடங்கிக் கிடக்கின்றது.

கடவுளை மறுப்போர்

சங்க காலத்திலே தமிழ் நாட்டிலே கடவுள் நம்பிக்கை யற்றவர்களும் இருந்தனர். மறுபிறப்பு உண்டென்போரும் இருந்தனர்; மறுபிறப்பு இல்லையென்போரும் இருந்தனர். மறுபிறப்பு இல்லை யென்போர் நாத்திகராகக் கருதப்பட்டனர்.

‘‘ஏனைய உயிர்களை வெறுக்கும் இரக்கமற்றவர்கள்; அடங்காச் சினமுடையவர்கள்; அறநெறியைப் போற்றாத பெருமையற்றவர்கள்; கூடா வொழுக்கத்தால் நிலைகுலைந்தவர்கள்; மறுபிறப்பு இல்லையென்று சொல்லுகின்ற அறிவற்றவர்கள்; இவர்கள்தாம் உனது அடிநிழலை அடைந்து வணங்கமாட்டார்கள்.

செறுதீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,
சேரா அறத்துச் சீரில்லொரும்,