| 164 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
அந்தணர்களை விரிநூல் அந்தணர், புரிநூல் அந்தணர் என்று இருவகையினராகக் கூறுகின்றது பரிபாடல் (பா. 11) விரிநூல் அந்தணர் என்போர் விரிவான வேதங்களையும் ஏனைய நூல்களையும் கற்றவர்கள்; அறவொழுக்கமுடையோர்; அறச்செயல்களை முன்னின்று ஆற்றுவோர். புரி நூல் அந்தணர் என்போர் அந்தணர்க்கு அடையாளமான பூணூலை மட்டும் அணிந்திருப்போர்; யாசகம் வாங்குவோர். இதனை, ‘‘விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப’’ (பா. 11) என்ற அடிகளால் காணலாம். பொலங்கலம் - பொற்பாண்டம். அந்தணர்கள் இருபிறப்பாளர்கள்; இரண்டு பெயர்களை யுடையவர்கள்; இரக்கமுள்ள நெஞ்சம் படைத்தவர்கள்; ஒப்பற்ற புகழையுடையவர்கள்; என்று பாராட்டிக் கூறுகிறது பரிபாட்டு. இதனை, ‘‘இரு பிறப்பு, இரு பெயர், ஈரநெஞ்சத்து ஒரு பெயர் அந்தணர்’’ (பா. 14) இவைகள் தமிழ் நாட்டிலே வாழ்ந்த அந்தணர்களைப் பற்றிக் கூறியவை. அந்தணர் ஆசாரம் சங்க காலத்திலே தமிழ் நாட்டிலே அகவொழுக்கமுடைய அந்தணர் பலர்வாழ்ந்தனர்; அவர்களிலே பலர் புறவொழுக்கத்தைப் போற்றுவோராகவும் இருந்தனர். அவர்கள் தங்கள் உடம்பை அழுக்கின்றித் தூய்மையாக வைத்துக் கொள்ளுவார்கள். அழுக்கு நீரிலே குளிக்கமாட்டார்கள். சுத்தமான தண்ணீரிலேதான் குளிப்பார்கள். பிறர் உடம்பிலே பட்ட தண்ணீர் தம்மேல் பட்டால் அதை |