பக்கம் எண் :

166எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

‘‘வேதங்களை விரும்பும் அந்தணர்கள் மணங் கமழும் வையையாற்று நீரைக் கண்டு மருண்டனர்; ஆண்களும் பெண்களும் தாங்கள் பூசியிருந்த வாசனைப் பொருள்களைக் கழுவியதனால் கலங்கி வருகின்ற நீரைக் கண்டு ஒதுங்கினர்.

நாறுபு நிகழும் யாறு கண்டழிந்து
வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழைப்
புலம்புரி யந்தணர் கலங்கினர் மருண்டு’’

இது வையையைப் பற்றிய ஆறாவது பாட்டில் காணப்படும் செய்தி. இவைகளால் தமிழ் நாட்டிலே வாழ்ந்த அந்தணர்கள் உள்ளும், புறமும் ஒழுக்கமுடையவர்களாய் வாழ்ந்தனர் என்பதைக் காணலாம்.

மொழி வெறுப்பில்லை

சங்க காலத்துப் புலவர்களிடம் மொழி வெறுப்பில்லை. பிறமொழிப் பயிற்சி தமிழ்மொழி வளர்ச்சிக்குத் துணை செய்யும் என்பதே அவர்கள் எண்ணம். சங்கப் புலவர்களிலே பலர் வடமொழிப் பயிற்சியுடையவர்கள். அவர்களுடைய பாடல்களிலே வடமொழிப் பொருள்களும், சொற்களும் கலந்திருப்பதே இதற்குச் சான்றாகும்.

‘‘தாமரை மலரிலே பிறந்த நான்முகனும், அவனுடைய தந்தையும் நீதான் என்று கூறும் அந்தணர்களின் அரியவேதம்.

தாமரைப் பூவினுள்பிறந் தோனும் தாதையும்
நீயென மொழியுமால் அந்தணர் அருமறை’’.                  (பா. 3. வரி 13-14)

‘‘தவறாமல் பிறந்து தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு நாளையும் போன்றது உன்னுடைய வாய்மை; உன்னுடைய சிறந்த பொறுமைக்கு எது ஒப்பாகுமென்று தேடினால் பெரிய நிலமே ஒப்பென்று காணமுடியும்; எல்லோர்க்கும் ஒரு