170 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
கண்டவுடன் இவள்தான் இரதியா? இவன்தான் மன்மதனா? என்று கேட்பர். கணவன்மார்கள் ஆம் என்று அக்கேள்விக்கு விடையளிப்பர். ‘‘அகலிகையின் வரலாற்றை விளக்கி எழுதப்பட்டிருக்கும் ஓவியத்தைக் காண்பர். இவன் இந்திரனாகிய பூனை; இவள் அகலிகை; அகலிகையைக் கற்பழித்த இந்திரன், வெளியில் வரும் சமயத்தில் சென்ற கவுதமன்; சினங்கொண்டதனால் அகலிகை கல்லுருப் பெற்ற விதம் இது; என்று அந்த ஓவியத்தைப் பார்த்து உரையாடுகின்றனர். ‘‘இத்தகைய பலவகையான ஓவியங்கள் நிறைந்த மண்டபத்தை யடைந்தவர்கள் அவைகளைக் குறித்துக் கேள்விகள் கேட்டனர். அக்கேள்விகளுக்கு விடையும் அளித்தனர். என்றூழ் உறவரும் இருசுடர் நேமி ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்; இரதி காமன் இவள் இவன் எனாஅ விரகியர் வினவ வினா இறுப்போரும்; இந்திரன் பூசை, இவள் அகலிகை, இவன் சென்ற கதவுமன், சினன் உறக் கல்லுரு ஒன்றியபடி இதுஎன்று உரைசெய்வோரும்; இன்ன பல பல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும், சுட்டறி வுறுத்தவும்’’ (பா. 19. வரி 46-54) இது செவ்வேளைப் பாடும் பாடல்; பரங்குன்றத்தில் உள்ள சித்திர மண்டபத்தின் சிறப்பைக் கூறியிருக்கின்றது. சங்க காலத்திலே ஓவியக்கலை உயர்ந்த நிலையிலிருந்தது; அது மக்களுக்கு நல்லொழுக்கம், உலக ஞானம், தெய்வபக்தி இவைகளைப் போதிக்கப் பயன்பட்டு வந்தது. என்று அறிகின்றோம். |