பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்173

ஒருவன் தான் காதலித்த பெண்ணைச் சமாதான முறையில் அடைய முடியாவிட்டால் படைதிரட்டிக் கொண்டு போவான்; அப் பெண்ணைக் சிறையெடுத்துச் செல்வான். பெண்ணின் சுற்றத்தார் இதனை அறிந்தால் அவர்களும் படைதிரட்டிச் சென்று இடைவழியிலே அவனை மறித்துச் சண்டை செய்வார்கள். (பா. 11)

மார்கழி மாதத் திருவாதிரை நாளிலே சிவபெருமானுக்குத் திருவிழாச் செய்வர். வேதங்களைப் பயின்ற அந்தணர்கள் அவ்விழாவைத் தொடங்கி நடத்துவார்கள். (பா. 11)

பண்டைக் காலத்தில் ஆறுகளிலே அணைகட்டி நீரைத் தேக்கி, விளை நிலங்களுக்குப் பாய்ச்சினர்; அந்த அணைகள் கருங்கற் பாறையைப் போல உறுதியாகக் கட்டப்பட்டிருந்தன. ‘‘பாறைப் பரப்பின் பரந்த சிறை’’ (பா. 12) என்ற அடியினால் இதனை உணரலாம்.

அக்காலத்துப் பெண்கள் காதிலே குழை வடிவாகச் செய்த பொன்னாபரணங்களை அணிவர். அவைகள் காதிலே தொங்கிக் கொண்டிருக்கும்; அவ்வாபரணங்கள் நெருப்பிலே காய்ச்சிச் செய்யப்பட்டவை. சிறந்த வேலைப்பாடமைந்தவை. ‘‘சுடு நீர் வினைக் குழை’’ (பா. 12) என்ற வரி இவ்வுண்மையை உணர்த்தும்.

உடைகளிலே நூலால் பூ வேலை செய்து அணிந்து கொள்ளுவார்கள். ‘‘துகில் சேர் மலர்போன்ம்’’ (பா. 12) என்பது இதை உணர்த்தும்.

சிறந்த அறங்களைச் செய்வோர் அதன் பயனை நுகர்வதற்காகச் சுவர்க்கத்தை அடைவார்கள். (பா. 19)

கணவன் பரத்தையர் வீட்டுக்குச் சென்று வரும் கூடா ஒழுக்கமுடையவனாயினும் கற்புடைய மகளிர் அவனை விலக்க மாட்டார்கள். அவனுடன் சேர்ந்து வாழ்வதே அவர்கள்