பக்கம் எண் :

178எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

மூன்றாம் பத்து

இந்நூலாசிரியர் பாலைக் கௌதமனார். இவர் பாடிய நூல் இந்த மூன்றாம் பத்து ஒன்றேதான். இப்பாடல்களைப் பெற்றவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய இளவல். இவன் வாழ்ந்த ஆண்டுகள் இருபத்து நான்கு.

இந்நூலைப் பாடிய கௌதமனாரைப் பார்த்து ‘‘நீர் விரும்பியதைப் பெற்றுக் கொள்ளுக’’ என்றான் குட்டுவன் ‘‘நானும் என் மனைவியும் சுவர்க்கம் புகவேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டார் புலவர். உடனே மன்னவன் அறிவுடைய அந்தணர்கள் பலரை அழைத்தான். பெரிய வேள்விகளைச் செய்வித்தான்; ஒன்பது வேள்விகள் முடிந்தன; பத்தாவது வேள்வி நடைபெறும் போது புலவரும் அவர் மனைவியும் காணாமற் போய்விட்டனர். அவர்கள் உடம்போடு சுவர்க்கம் புகுந்துவிட்டனர். இச்செய்தி இந்நூற் பதிகத்தின் இறுதியிலே காணப்படுகின்றது. பாலைக் கவுதமானார் அந்தணர்; இம்மன்னவன் அந்தணர்பால அன்புடையவன்; என்பதை இதனாற் காணலாம்.

‘‘ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல்,
ஈதல், ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும்
அறம்புர அந்தணர் வழி மொழிந்து ஒழுகி                            (பா. 24)

வேதம் ஓதுதல், யாகம் செய்தல் இவைகளைப் பிறர்க்குச் செய்வித்தல், கொடுத்தல், கொடுப்பதை வாங்கிக்கொள்ளுதல், என்னும் ஆறு தொழில்களையும் பின்பற்றி நடக்கும் அந்தணர்களின் சொற்படி நடந்து’’

இந்தப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் மறை பயின்ற அந்தணர்களிடம் பெருமதிப்புடையவன்; அவர்களுக்கு வேண்டுவன கொடுப்பவன்; அவர்கள் சொற்படி நடப்பவன்;