180 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
பரணர் இந்தப் பத்துப் பாடல்களுக்கும் உம்பற்காட்டு வாரி என்னும் நிலத்தையும், செங்குட்டுவனுடைய மகனாகிய குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றார். கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் என்ற பெயர் குறப்பிடத்தக்கது. ‘‘கடல்பிறக் கோட்டிய’’ என்பதற்குக் ‘‘கடற்படையைப் பின்னடையச் செய்த’’ என்பது பொருள். இவன் கடற் போரிலே வல்லவன்; பெரிய கடற்படை இவனிடம் இருந்தது. இவன் வாழ்ந்திருந்த காலம் இருபத்து நான்கு ஆண்டுகள். ‘‘கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடுவரை வடதிசை எல்லை இமய மாகத், தென்னம் குமரியொடு ஆயிடை, அரசர் முரசுடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ! (பா. 43) சிவபெருமான் வாழ்கின்ற பெரிய இமயமலையை வடக்குத் திசையின் எல்லையாகக் கொண்டனை; தெற்கே குமரி முனையை எல்லையாகக் கொண்டனை. இவைகளுக்கு இடையிலே உள்ள அரசர்களுடைய பல நாடுகளையும், அவைகளின் பழமையான அழகு சிதையும்படி அமர் புரிந்து அழித்தாய்; போரிலே வெற்றி பெறக்கூடிய பெரிய சேனைகளையுடைய செங்குட்டுவன்’’. இம் மன்னவன் ஒப்பற்ற வீரன்; இமய முதல் குமரிவரையுள்ள நாட்டை ஆண்டவன்; தன்னை எதிர்த்த மன்னர்களின் நாடுகளையெல்லாம் நாசமாக்கினான். இவ்வுண்மையை இவ்வடிகள் காட்டின. ‘‘பௌவம் கலங்க வேலிட்டு, உடைதிரைப் பரப்பின் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன். (பா. 46) |