பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்183

இவன் காலத்திலே பார்ப்பார்கள் நல்லறிஞர்களாகச் சிறந்து விளங்கினார்கள்.

‘‘படு பிணம் பிறங்க நூறிப், பகைவர்
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே!                              (பா. 69)

வீழ்ந்து கிடக்கும் பிணங்களே காட்சியளிக்கும்படி போர்க்களத்திலே பகைவர்களை நொறுக்கித் தள்ளுவாய்; பகைவர்களால் கெட்டுப்போன குடிகளை நல் வாழ்விலே வாழும்படி பழக்கிய வெற்றியையுடைய வேந்தனே’’.

இவன் காரணமின்றி எந்நாட்டின் மீதும் படையெடுக்கமாட்டான். தன்னுடைய குடிமக்களின் குறைகளைப் போக்காத கொடுங்கோல் மன்னர்களின்மேல்தான் படையெடுப்பான்; அந்தக் கொடுங்கோலர்களை வீழ்த்துவான்; அவர்கள் நாட்டுக் குடிமக்களை நல்வாழ்விலே வாழ வைப்பான். இது தமிழரசர்களின் சிறந்த பண்பாடு. இப்பண்பாட்டை இம் மன்னவன் பின்பற்றி வந்தான். இவ்வுண்மையை மேலே காட்டிய அடிகள் விளக்கி நின்றன.

எட்டாம் பத்து

இதன் ஆசிரியர் அரிசில் கிழார். இப்பத்தின் தலைவன் பெருஞ் சேரல் இரும்பொறை.

அரிசில்கிழார் இப் பத்தைத் தவிர இன்னும் சில பாடல்களையும் பாடியிருக்கின்றார். இவருடைய பாடல்கள் குறுந்தொகையிலே ஒன்றும், புறநானூற்றிலே ஏழும் காணப்படுகின்றன.

அரிசில்கிழார் இப் பத்துப் பாடல்களுக்காக ஒன்பது நூறாயிரம் பொற்காசு பெற்றார்; அரசனுடைய சிம்மாசனத்தையும்-அரசாட்சியையும் பரிசாகப் பெற்றார். தான் பரிசு பெற்ற