‘‘மழை வேண்டு புலத்து மாரி நிற்ப, நோயொடு பசியிகந்து ஓரீஇப் பூத்தன்று, பெருமநீ காத்த நாடே. (பா. 13) மழை வேண்டிய இடங்களிலே தாராளமாக மழை பெய்கின்றது; மக்களை நலியுறுத்தும் நோய்கள் நாட்டிலேயில்லை; பசியும் இல்லை. நீ ஆளும் நாட்டில் செல்வம் கொழித்துச் சிறந்திருக்கின்றது. ’’ ஒரு நாடு எந்த நிலைமையில் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது இது. பிணியும் வறுமையும் பீடிக்காமல் நாட்டு மக்களைப் பாதுகாப்பதே நல்லாட்சியின் கடமை என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது. பிறர்க்கென வாழ்க! ‘‘பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்திநீ ஆகன்மாறே (பா. 38) பலருக்கும் பகுத்துக் கொடுப்பதற் கென்றே செல்வத்தைத் தொகுத்து வைத்திருக்கின்றவன்; ஆண்மையை உடையவன்; என்றும் பிறர் நன்மைக்காக நீ வாழ்வாயாக; இதுவே நன்மை பெறும் வழியாகும்’’ ‘‘மின் இழை விறலியர் நின்மறம் பாட, இரவலர் புன்கண்தீர, நாள்தொறும் உரைசால் நன்கலம் வரைவில வீசி, அனையை ஆகல்மாறே; எனையதூஉம் உயர்நிலை உலகத்துச் செல்லாது, இவணின்று இருநில மருங்கின் நெடிது மன்னியரோ! (பா. 54) ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்த பாடகிகள் உன் வீரத்தை உயர்த்திப் பாட-இரப்போர்களின் வறுமைத் துன்பந்தீர-ஒவ்வொரு நாளும் சிறந்த நல்ல ஆபணரங்களை அளவில்லாமல் கொடுப்பாயாக; அவ்வழியிலே சிறந்து |