பக்கம் எண் :

188எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

நிற்பாயாக. எப்படியானாலும் வானத்திலேயுள்ள துறக்கத்திற்குச் செல்லாமல் இங்கேயே நின்று இவ்வுலகிலே நீண்ட காலம் நிலைத்து வாழ்வாயாக!”

தொகுத்த பொருளைப் பலர்க்கும் பகுத்துக்கொடுத்து உண்க; வறியோர்க்கு வழங்குக; துறக்கத்திற்குப் போகவேண்டாம்; இக்காரியங்களைச் செய்து இவ்வுலகிலேயே வாழ்க; என்று அரசர்க்கு அறிவுரை கூறுவதை இவ்வடிகளால் அறியாலாம்

‘‘தான் தேடிய செல்வத்தைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்ணவேண்டும். வருந்தும் உயிர்கள் பலவற்றையும் காப்பாற்ற வேண்டும்; இவைகளே அறநூலோர் தொகுத்துக் கூறியிருக்கும் அறங்களுக்குள்ளே தலைசிறந்தது.

பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’’

என்று திருக்குறள் கூறுகின்றது. இத்திருக்குறள் மேலே காட்டிய பதிற்றுப்பத்துப் பகுதிகளின் திரட்சியேயாகும்.

வேள்வியும் விருந்தும்

பண்டைத் தமிழ் மன்னர் வேத வேள்விகளை ஆதரித்து வந்தனர். தெய்வங்களுக்கு விருந்தளிப்பது வேத வேள்வி; மக்களுக்கு உணவளிப்பது விருந்து; இவைகள் இரண்டும் அதாவது வேள்வியும் விருந்தும் ஒன்றே என்பது அவர்கள் கொள்கை.

‘‘சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்று
ஐந்துடன் போற்றி; அவைதுணையாக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை யன்ன சீர்சால் வாய்மொழி;
உருகெழு மரபின் கடவுட்பேணியர்,