பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்189

கொண்ட தீயின் சுடர் எழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி.

சொல்லிலக்கண நூல், பொருள் இலக்கண நூல், சோதிட நூல், வேத நூல், அடங்கிய உள்ளம் என்ற ஐந்தையும் போற்றிப் பாதுகாத்தவர்கள்; அவைகளின் துணையால் எவ்வுயிர்க்கும் தீமை செய்யாமல் வாழ்கின்ற சிறந்த கொள்கையையுடையவர்கள்; சூரியனைப்போல் தவறாத உயர்ந்த உண்மை மொழியை உடையவர்கள்; இத்தகைய அந்தணர்கள், சிறந்த முறையிலே தேவர்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட வேள்வித் தீயின் நெருப்பு உயர்ந்து எரியுந்தோறும் அது எல்லோரும் விரும்பும் உண்மையை விளக்குவதன் பொருட்டு அவ்வாறு பரவி நிற்கின்றது. இத்தகைய புகழ் பெற்றது வேள்வி’’.

இதனால் வேள்வி செய்யும் அந்தணர்களின் அறிவையும் ஒழுக்கத்தையும் அறியலாம்.

‘‘வருநர் வரையார், வாரவேண்டி
விருந்துகண் மாறாது உணீஇய, பாசவர்
ஊனத்தழித்த வான்நிணக் கொழும்குறை
குய்யிடுதோறும் ஆனாது ஆர்ப்பக்;
கடல்ஒலி கொண்டு செழுநகர்வரைப்பின்
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி

வருகின்றவர்களைத் தடுக்காமல் அன்புடன் உண்டு செல்லும்படி வேண்டிக் கொள்ளுகின்றனர். விருந்தினர்கள் திரும்பிப் போகாமல் இருந்து உண்ணும் பொருட்டும், ஆட்டு வாணிகர் இறைச்சி வெட்டும் கருவியினால் வெட்டியெடுத்த சிறந்த மாமிசத்தைக் குய்யென்ற ஓசையுடன் பொரித்து எடுக்கின்றனர். இவ்வாறு நகரின் நடுவிலே சமைக்கின்ற