பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்193

உழவின் உயர்வு

உழவுத் தொழிலில் உயர்ந்து விளங்கும் நாடே பஞ்சத்திலே வீழ்ந்து பரிதவிக்காது; அந்நாட்டிலே வாழ்வோர் இன்புறுவர்; அந்த நாடே செல்வத்திலே சிறந்து வாழும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.

‘‘கருவி வானம் தண்டளி சொரந்தெனப்,
பல்விதை உழவிற் சில் ஏராளர்,
பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி,
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்,
அகன்கண் வைப்பின் நாடு கிழவோயே                          (பா. 76)

கூட்டமாகிய மேகங்கள் மழை பெய்தவுடன், பலவிதமான விதைகளையும் வைத்திருக்கின்ற உழவிலே சிறந்த உழவர்கள்; தங்கள் வேலையை ஊக்கத்துடன் செய்கின்றனர்; குளிர்ந்த நீர்த்துறையை அடைகின்றனர்; அழகான பகன்றைப் பூமாலைகளை ஆடைகளைப் போல அணிகின்றனர். விளைந்து விளங்குகின்ற கதிர்களிலிருந்து அழகிய தானிய மணிகளைப் பெறுகின்றனர். இத்தகைய வளமுடைய பெரிய நாட்டின் தலைவனே’’

ஒரு நாட்டின் உயர்வுக்கு உழவுத் தொழிலே காரணம் என்பதை இதனாற் காணலாம்.

தவத்தில் நம்பிக்கை

கடைச் சங்க காலத்துத் தமிழர்களுக்குத் தவத்திலே நம்பிக்கையுண்டு. சென்ற பிறப்பில் தவம் புரிந்தவர்களே இப்பிறப்பில் செல்வத்திலே சிறந்து வாழ்கின்றனர்; ஒழுக்கதால் உயர்ந்து விளங்குகின்றனர்; செல்வமுள்ள குடியிலே பிறந்திருப்பதற்கு முன் செய்த தவந்தான் காரணம்;