பக்கம் எண் :

194எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

வறிய குடியிலே பிறந்து வாடுவதற்குக் காரணம் தவமின்மைதான். இத்தகைய நம்பிக்கை பண்டைத் தமிழர்களிடம் பரவியிருந்தது.

வறியோர்க்கும் செல்வர்க்கும் வம்பும், சண்டையும் ஏற்படாமலிருக்க இந்நம்பிக்கை உதவி புரிந்தது. இல்லாதவர்கள், உள்ளவர்கள் என்ற பிரிவு நிலைத்திருக்கும் சமுதாயத்திலே சமாதானம் நிலைத்திருப்பதற்கு முற்பிறப்பும், தவமும், தலைவிதியும் துணைசெய்து வந்தன.

‘‘வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும்,
தெய்வமும், யாவதும் தவமுடையோர்க்கு                        (பா. 74)

கொடுக்குந்தன்மை-சிறந்த குணங்கள்-செல்வம்-புத்திரப் பேறு-தெய்வபக்தி-எல்லாம் தவமுடையோர்க்கே கிடைக்கும். ’’

தவத்திலே-தவப் பயனிலே தமிழர்கள் எவ்வளவு அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை இதனாற் காணலாம். இக்கருத்தைத் தழுவியேதான் பிற்காலத்திலும் ‘‘மேலைத் தவத்தளவேயாகுமாம் தான் பெற்ற செல்வம்’’ என்பது போன்ற பாடல்கள் எழுந்தன.

‘‘இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர், பலர் நோலா தார்’’

என்ற குறளும் இக்கருத்துடையதே.

பாரதம்

பதிற்றுப்பத்திலே ஒருபாட்டில் பாரதக்கதை குறிப்பிடப்பட்டுள்ளது. கடைச்சங்க காலத்தில் பாரத வரலாறு தமிழ் நாட்டிலே பரவி யிருந்தது. கடைச்சங்க காலத்திற்குப் பின்னர் பெருந்தேவனார் என்பவர் பாரத வரலாற்றைத் தமிழிலே பாடியிருக்கின்றார். இதனால் இப்புலவருக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று பெயர். இராமாயண வரலாறு