தமிழிலே எழுதப்படுவதற்கு முன்பே பாரத வரலாறு தமிழிலே எழுதப்பட்டுவிட்டது. ‘‘போர்தலை மிகுந்த ஈரைம்பதின்மரொடு துப்புத்துறை போகிய, துணிவுடை யாண்மை, அக்குரன் அனைய, கைவண்மையையே! (பா. 14) போரிலே ஈடுபடுவதற்கு முன்னின்ற நூற்றுவரோடு சமாதானம் பேசுவதற்காகத் தூது சென்றவன்; உளவு காண்பதிலே உயர்ந்தவன்; ஆண்மையும் துணிவும் அமைந்தவன்; அக்குரன் என்னும் பெயருடையவன்; சிறந்த கொடைவள்ளல்; அவனைப் போன்ற கொடைவள்ளல் நீ. ’’ இது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குறிக்கும் பாட்டு. இதிலே பாரத வரலாறு குறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கின்றோம். சேரமான் பெருஞ்சோற்று உதியலாதன் என்பவன் சேர மன்னர்களிலே சிறந்தவன். இவன் பாரதப்போர் நடைபெற்ற காலத்தில் தமிழ் நாட்டில் தனியரசாட்சி செய்தவன். இவன் பாண்டவர் சேனைக்கும், கவுரவர் சேனைக்கும் அவர்கள் அடித்துக்கொண்டு மாளும்வரையிலும் சோறு போட்டவன். இவ்வரலாறு புறநானூற்றிலே காணப்படுகின்றது. இப்பெருஞ் சோற்று உதியலாதனைப் பற்றிய பாடல் பதிற்றுப்பத்திலே காணப்படவில்லை. பதிற்றுப்பத்தலே நமக்குக் கிடைக்காத முதற்பத்தோ அல்லது பத்தாம் பத்தோ இவனைக் குறித்துப் பாடியதாக இருந்தாலும் இருக்கலாம். தெய்வங்கள் முருகன், திருமால், சிவபிரான் முதலிய தெய்வங்களின் பெயர்கள் பதிற்றுப் பத்திலே காணப்படுகின்றன. |