196 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
‘‘சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடும்சின விறல் வேள். (பா. 11) அச்சத்தைத் தரும் சூரனுடைய மாமரத்தை அடியோடு அழித்த முருகன்; பெரிய புகழையும், கடுமையான சினத்தையும், வெற்றியையும் உடைய முருகன். ’’ இது முருகனுடைய வரலாற்றை நினைவூட்டுகின்றது. ‘‘பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி, வண்டூது பொலிதார்த்திருஞெமர் அகலத்துக், கண்பொருதிகிரி, கமழ்குரல் துழா அய், அலங்கற் செல்வன் சேவடிபரவி, நெஞ்சுமலி உவகையர், துஞ்சுபதிப் பெயர. (பா. 31) பசுமையான கொடிகளிலே நீலோற்பலங்கள் மலர்ந்திருக்கின்றன; குளிர்ந்த நீர்த்துறையிலே குளித்தபின், வண்டுகள் மொய்க்கின்ற அழகிய மலர்மாலையையும், திருமகள் வாழ்கின்ற மார்பினையும், கண்ணைப் பறிக்கும் ஒளியையுடைய சக்கராயுதத்தையும், மணம் வீசும் கொத்தான துளசி மாலையையும் உடைய திருவனந்தபுரத்துத் திருமாலை வணங்கி, மனத்திலே மகிழ்ச்சி நிறைந்தவராய்த் தாங்கள் வாழும் ஊர்க்குச் செல்வர்’’. இது திருவனந்தபுரத்தில் உள்ள திருமாலைக் குறித்து வந்தது. ‘‘கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை (பா. 43) பரமசிவன் நிலைத்து வாழ்கின்ற மலை; மிக உயர்ந்த இமயமலை’’ இது இமயத்தையும் சிவபெருமானையும் குறித்தது இன்னும் ‘‘கடவுள்’’ “கடவுளர்’’ என்ற பெயர்களால் தெய்வங்கள் |