பக்கம் எண் :

20எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

இந்நூலில் அவ்வெண்பாவின் வரிசையைப் பின்பற்றவில்லை. பொருள் கருதியும், பாடல்களின் சுருக்கம், பெருக்கம் கருதியும் வேறு வரிசையில் இந்நூலில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அவ்வரிசையாவது: 1. ஐங்குறுநூறு, 2. குறுந்தொகை, 3. நற்றிணை, 4. அகநானூறு, 5. கலித்தொகை, 6. பரிபாடல், 7. பதிற்றுப்பத்து, 8. புறநானூறு. இதுவே இந்நூலில் அமைந்திருக்கும் வரிசை முறை. நூல் முழுவதையும் படித்தால் தமிழர் நாகரிகத்தின் தன்மையைக் கண்டறியலாம்; பழந்தமிழர்களின் பண்பைக் காணலாம்.