பக்கம் எண் :

206எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

இறப்பின் உண்மையை மறக்காதவர்கள் இன்பத்தைத் தான் மட்டும் அனுபவிக்கவேண்டு மென்ற ஆசை கொண்டு அண்டையில் உள்ளவர்களைக் சுரண்டமாட்டார்கள்; அடிமைப்படுத்த மாட்டார்கள்; உலக வாழ்வால் வரும் இன்பம் நிலையானதன்று என்று நினைப்பவர்கள். எல்லோரும் இன்புறவேண்டு மென்று எண்ணுவார்கள். இதறக்ாக ஊக்கத்துடன் உழைப்பார்கள். இவ்வுண்மைகளை உணர்த்துவதே ‘‘சாதலும் புதுவதன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே’’ என்ற அடிகள்.

‘‘யாதும் ஊரே’’ என்று தொடங்கும் இது போன்ற சிறந்த கருத்துள்ள செந்தமிழ்ச் செய்யுளை வேறு எந்த நூலினும் காணமுடியாது.

அரசியல்

நல்ல அரசியல் இல்லாவிட்டால் எந்த நாடும் நாசமடையும். நல்ல அரசியல் அமைப்புள்ள நாட்டில்தான் மக்கள் ஒன்றுபட்டு வாழ்வார்கள். மக்களுடைய வாழ்க்கைத்தரமும் உயர்ந்திருக்கும். இந்நாடே செல்வங்கொழிக்கும் சிறந்த நாடாக விளங்கும்; இன்ப வாழ்வுக்கு உதவும் எல்லாப் பண்டங்களும் விளையும் இணையற்ற நாடாகத் திகழும். மக்கள் சாதி-மத-இன வெறிகளினால் மாறுபட்டுப் போராட மாட்டார்கள்; மனிதத் தன்மையுடன் ஒன்றுபட்டு வாழ்வார்கள். இவ்வுண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாட்டுத் தமிழர்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டிருந்தனர்.

அரசன் தன்னுடைய நன்மைக்காக-இன்பத்துக்காக ஆள்பவனல்லன்; நாட்டின் நன்மைக்காக வாழபவன்; குடிமக்களின் குறைகளைப் போக்குவதற்காக வாழ்பவன்; என்ற கொள்கையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு