பக்கம் எண் :

210எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

குடிமக்களின் கொடுக்கும் வல்லமைக்குத் தகுந்த அளவுதான் வரி விதிக்கலாம். அரசாங்கச் செலவுக்கு வருமானம் போதாவிட்டால் மக்கள் மனங் குமுறாத வழியில்-மக்கள் தலையில் நேரடியாக வரிச்சுமை ஏறாதவகையில் வருமானத்திற்கு வழிதேட வேண்டும். இது திறமையுள்ள அரசாங்கத்தின் கடமை.

‘‘விளைந்த நெல்லைச் சேதமில்லாமல் அறுத்துக் கவளம் கவளமாக உட்கொண்டால், ஒரு மாவுக்குக் குறைந்த நிலத்திலே விளைந்த நெல்லும், பல நாட்களுக்கு உணவாகும். நூறு வயல்களிலே நன்றாக நெல் விளைந்திருந்தாலும், ஒரு யானை அவ்வயல்களிலே தனியாக இறங்கி, அந்நெல்லை உண்ணத் தொடங்கினால் அவ்வளவும் பாழாகும்; அதன் வாயிலே போகும் நெல்லைவிட அதன் கால்களால் மிதிப்பட்டுச் சேதமாகும் நெல்லே மிகுதியாக இருக்கும்.

‘‘அறிவுடைய மன்னவன் வரி விதிக்கும் முறையை அறிந்து குறைவாக வரி விதிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவனுடைய நாட்டிலே கோடிக் கணக்கான செல்வம் குவிந்து சிறந்திருக்கும் அந்த நாடு செல்வப் பெருக்குடைய சிறந்த நாடாக விளங்கும்.

‘‘மன்னவனும் மதியற்றவன்; அவனைச் சூழ்ந்த அதிகார வர்க்கத்தினரும் அறிவுரை கூறுவோர் அல்லர். அவன் விரும்பியதற்கு ஆமாம் போடுபவர்கள். அன்பின்றிக் குடிமக்களிடம் பொருள் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்கள். இத்தகைய அசரன், யானை புகுந்தபுலம் போன்றவன்; அவனும் உண்டு வாழமாட்டான்; அவனுடைய நாடும் நாசமாகும்.

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;