‘‘உங்கள் வயது பலவாகியும் இன்னும் நரையில்லாம லிருக்கின்றீர்களே! இது எப்படி முடிந்தது? என்று கேட்பீர்களானால் காரணங் கூறுகிறேன் கேளுங்கள்! என் மனைவி சிறந்த குணங்களையுடையவள்; என் மக்கள் அறிவு நிரம்பியவர்கள். என் மேற்பார்வையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என் உள்ளம் போல் ஒத்துழைக்கின்றனர். எனது நாட்டு மன்னவனும் குடிகளுக்குக் கொடுமை செய்யாமல் காப்பாற்றுகின்றான். நான் வாழும் ஊரிலே அறிவும் அடக்கமும் உள்ள ஆன்றோர்கள் பலர் வாழ்கின்றனர். அவர்கள் சிறந்த கொள்கையை உடையவர்கள். இதனால்தான் நான் கவலையின்றி, நரை திரையின்றி நன்றாக வாழ்கின்றேன்’’ என்று பட்டென்று பதில் கொடுத்தார். யாண்டு பலவாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்; என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர் என் இளைஞரும்; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே. (பா. 191) இதுவே அப்பாடல். உயர்ந்த நாடென்றால் அந்த நாட்டிலே உறைவோர் அனைவரும் கல்வி கற்றிருக்க வேண்டும்; தொழிலாளி முதலாளி சச்சரவுகள் தோன்றுவதற்கு இடமில்லாமலிருக்க வேண்டும். அறிஞர்களின் ஆதரவைக் கொண்டு அரசாட்சி இடந்தரக் கூடாது. நாட்டைப் பட்டினியும் நோயும் சூழ்ந்து பயமுறுத்தாமல் பாதுகாக்க வேண்டும். இத்தகைய நாட்டில் உள்ளவர்கள்தாம் உள்ளத்திலே ஒரு கவலையுமின்றி-உடல் உரமுடன்-நரை திரையின்றி நீண்ட நாள் |