பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்221

அண்டை நாடுகளுக்குள் சண்டை கூடாது; சமாதானம் நிலவவேண்டும்; அப்பொழுதுதான் நாட்டை நாசமாக்கும் விரோதிகள் தலை தூக்கமாட்டார்கள் இக்கருத்து இப்பாடலில் இருப்பதைக் காணலாம்.

அதியமான் நெடுமான்அஞ்சி யென்பவன் தகடூரை ஆண்ட ஒரு சிற்றரசன், பெரிய கொடை வள்ளல். தமிழ் மூதாட்டி ஒளவையாரின் ஆருயிர் நண்பன். அவன் புகழைக் கண்டு பொறாமை கொண்ட தொண்டைமான், அதியமானுடன் போர் செய்ய எண்ணினான். இதற்காக ஆயத்தஞ் செய்து கொண்டிருந்தான். இதனை அறிந்த அதியமான், ஒளவையாரிடம் இச்செய்தியை உரைத்தான். ஒளவையார் போர் நிகழாமல் தடுக்கும் பொருட்டுச் சமாதானத் தூதராகத் தொண்டைமானிடம் தூது போனார்.

தொண்டைமான் ஒளவையாரை அன்புடன் வரவேற்றான்; தன் படைக்கலச்சாலைக்கு அழைத்துச் சென்றான்; தான் திரட்டி வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டினான். அவனுடைய படைக்கலங்களைப் பார்த்த ஒளவையார் அவனிடம் கீழ்வருமாறு கூறினார்.

‘‘உன்னுடைய இப்படைக்கலங்கள் மயிற் பீலி அணியப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, எண்ணெய் தடவப்பட்டு நல்ல பாதுகாப்பான பெரிய இடத்திலே வைக்கப்பட்டிருக்கின்றன. என்னுடைய தலைவனாகிய அதியமானோ, செல்வம் உள்ளபோது எல்லோர்க்கும் இனிய உணவளிப்பான்; இல்லாதபோது உள்ளதைப் பங்கிட்டு எல்லோருடனும் சேர்ந்திருந்து உண்ணுவான். அவன் ஏழைகளின் கூட்டத்திற்குத் தலைவன். அவனுடைய கூர்மையான வேற்படைகள் உன்னுடைய படைகளைப் போல இல்லை. அவைகள் பகைவர்களைக் குத்தியதனால் பக்கமும் நுனியும்