| 222 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
சிதைந்துவிட்டன. இப்பொழுது அவைகள் கொல்லனுடைய உலைக்களத்திலே மீண்டும் சீர் செய்வதற்காகப் போட்டுக் கிடக்கின்றன. இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக், கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்யணிந்து கடியுடைவியன் நகர்அவ்வே; அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொல்துறைக் குற்றுஇல மாதோ; என்றும் உண்டாயின் பதங்கொடுத்து இல்ஆயின் உடல் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேலே’’ (பா. 95) இதுவே ஒளவையார் கூறிய அறிவுரைப் பாட்டு. ‘‘அதியமான் சண்டை செய்வதிலே சமர்த்தன்; உனக்குப் போர்ப் பழக்கம் இல்லை. அவன் குடி மக்களின் ஆதரவைப் பெற்றவன்; உனக்குப் பொது மக்கள் ஆதரவில்லை. ஆகையால் நீ போரில் இறங்கினால் தோல்வியடைவாய்’’ என்ற கருத்தை இப்பாடலிலே காணலாம். சண்டையைக் காட்டிலும் சமாதானமே நாட்டுக்கு நலந்தரும்; மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வையளிக்கும்; என்பது பண்டைத் தமிழ்ப் புலவர்களின் கருத்து; இக்கருத்தை வலியுறுத்த அவர்கள் முயன்றனர். புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றிலே இவ்வுண்மை காணப்படுகின்றது. மேலே காட்டிய உதாரணங்களே இதற்குப் போதுமானவை. உழவின் உயர்வு உணவுப் பஞ்சம் தாண்டவமாடும் நாட்டில் ஒரு சிறிதும் சமாதான வாழ்வு நிலைத்திராது. உணவுப் பொருள்களின் விளைவு பெருகினால்தான் பட்டினிக் கொடுமையும், பஞ்சமும் |