பக்கம் எண் :

24எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

இவர் சேரன், பாண்டியன், மலையமான் திருமுடிக்காரி ஆகிய அரசர்களின் ஆதரவு பெற்றவர்.

மூன்றாவது நூறு குறிஞ்சித்திணை; இதைப் பாடிய புலவர் கபிலர். இவர் பாரி என்னும் வள்ளலின் ஆருயிர் நண்பர். அவனுடனேயே நீண்ட நாள் ஒன்றாக வாழ்ந்தவர். இவருடைய வாழ்நாளில் பெரும்பகுதி மலை நிலத்திலேயே கழிந்தது. மலை நிலமக்களின் வாழ்க்கை நிலைமைகளை நன்றாகக் கண்டறிந்தவர். குறிஞ்சியைப் பற்றிப் பாடுவதிலே வல்லவர்.

இவருடைய பாடல்கள் சங்க நூல்களிலே நிறைந்திருக்கின்றன. அகநானூற்றிலே பதினெட்டு, குறுந்தொகையிலே இருபத்தொன்பது, நற்றிணையிலே இருபது, புறநானூற்றிலே இருபத்தெட்டு இவருடைய பாடல்கள். கலித்தொகையிலே குறிஞ்சிக்கலி, பத்துப் பாட்டிலே குறிஞ்சிப் பாட்டு, பதிற்றுப்பத்திலே ஏழாம்பத்து ஆகியவைகளும் இவரால் இயற்றப்பட்டவை. இவருடைய அகத்திணைப் பாடல்கள் பெரும்பாலும் குறிஞ்சித்திணையைப் பற்றியே கூறுகின்றன. இவருடைய வரலாற்றைப் ‘‘பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்’’ என்பதில் விரிவாகக் காணலாம்.

நான்காவது நூறு பாலைத்திணை; இதைப் பாடியவர் ஓதலாந்தையார் என்னும் புலவர். ஆதன்தந்தையார் என்ற பெயர் ஆந்தையார் என்று மருவியதாகக் கூறுவர். இவர் ஆதன் தந்தையார் என்ற காரணப் பெயரையுடையவரா? அல்லது ஆந்தையார் என்ற இயற்பெயரையே உடையவரா? இது ஆராயத் தக்கது. ஓதல் ஆந்தையார் என்பதற்கு ஓதுவதையே தொழிலாகக் கொண்ட ஆந்தையார் என்பது பொருள்.

இவரும் கடைச்சங்கப் புலவர்களிலே ஒருவர். குறுந்தொகையிலே இவருடைய பெயரால் மூன்று பாடல்கள்