பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்31

பால்தரும் பசுக்களெல்லாம் நிறைய பாலைச் சுரப்பதாக; உழுவதற்கேற்ற காளைகள் பலவாகப் பெருகுவதாக; என்று விரும்பினாள் எம் தலைவி. ‘‘

‘‘பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக;
என வேட்டோளே யா                                            (பா. 5)

தவறாமல் மழை பெய்வதாக; அதனால் செல்வம் மிகவும் சிறப்பதாக; என்று விரும்பினாள் எமது தலைவி’’.

இவைகள், ஒருஇல்லக்கிழத்தி தன்னுடைய வாழ்க்கை எப்படி யிருக்கவேண்டும் என்று விரும்புகிறாள் என்பதைக் கூறும் பாடல்கள்.

‘‘நாம் நல்ல செல்வக் குடும்பங்களிலே வாழ்க்கைப் படவேண்டும்; வறுமையின்றி இல்லறத்தில் இன்புற்று வாழவேண்டும்’’. இவை பெண்களின் விருப்பம். இவ்விருப்பத்தைக் காட்டும் பாடல்கள் இவை.

அரசியல் கருத்து

அரசன் வெற்றியுடன் வாழவேண்டும். குடிமக்கள் குறைகளை நீக்குவதே அரசாட்சியின் குறிக்கோளாக இருக்கவேண்டும். இக்கொள்கையுள்ள ஆட்சியை மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். இத்தகைய அரசால்தான் நாட்டிலே நல்லறங்கள் நடைபெறும். அமைதி நிலவும்; மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். இதுவே பழந்தமிழர் கருத்து.

மருதத்திணையின் முதற் பத்துப் பாடல்களின் முதல்வரி ஒவ்வொன்றும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.

அவ்வடிகள் ஆதன் அவினி என்னும் சேர மன்னனை வாழ்த்துவதாக அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது.